;
Athirady Tamil News

ஒன்றரை நிமிடத்தில் 160 மூலிகைகளின் பெயர்கள் – கின்னஸ் அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் தமிழக சிறுமி..!!

0

தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் துரைராஜபுரம் காலனியை சேர்ந்த கனகராஜ்-வனிதா தம்பதியின் மகள் விகாசினி. தற்போது ஐந்து வயது சிறுமியாக உள்ள விகாசினி, சமீபத்தில் 1 நிமிடம் 27.5 நொடிகளில் 160 வகையான மூலிகைகளின் பெயரை மனப்பாடமாக உலக சாதனை அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில் ஒப்புவித்தார்.

இதற்கு முன்னர், 3 நிமிடத்தில் 160 மூலிகைகளின் பெயர் ஒப்புவித்த நிகழ்ச்சி இன்றுவரை உலக சாதனையாக இருந்துவரும் நிலையில், அதைவிட குறைந்த நிமிடத்தில் தற்போது மனப்பாடமாக ஒப்புவித்துள்ள விகாசினியின் பெயர் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − 5 =

*