;
Athirady Tamil News

பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த இரட்டையர்கள்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

0

அமெரிக்காவின் Nevada மாகாணத்தில், மகன்களே பெற்ற பெற்ற தாயை கொடுரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nevada மாகாணத்தை சேர்ந்த Dawn Liebig (46) என்பவருக்கு 17 வயதில் Michael Wilson, Dakota Saldivar என்ற இரட்டை மகன்கள் உள்ளனர். கடந்த மாதம் 9-ம் தேதியன்று மகன்கள் இருவரும் தங்களது தாயுடன் அரை மணி நேரமாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அன்று இரவு Dawn உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென யாரோ கடுமையாக தாக்கி கத்தியால் கழுத்து பகுதியில் குத்தியுள்ளனர்.

இதில் வலிதாங்க முடியாத Dawn உதவிக்கு தன் மகன்களை சத்தமிட்டு அழைத்துள்ளார். ஆனால் அவருக்கு தெரியவில்லை கொடூரமாக தாக்குவதே அவரின் மகன்கள் தான் என்று

பின்னர் தாயின் உடலை காரில் ஏற்றிய இருவரும், Dawn இறப்பு ஒரு தற்கொலை போல இருக்க வேண்டும் என்பதற்காக மலையிலிருந்து தள்ளிவிட முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அதற்குள், “என்னுடைய அம்மா இறந்துவிட்டார்” என செல்போனில் அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியின் மூலம் உஷாரான பொலிஸார் கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*