;
Athirady Tamil News

புகையிரத சேவைகள் படிப்படியாக வழமைக்கு..!!

0

மட்டக்களப்பு, தலைமன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் பதுளைக்கான இரவு நேர புகையிரத சேவைகள் இன்று இடம்பெறுகின்றது.

மூன்று நாள் வேலை நிறுத்தத்தின் பின்னர் புகையிரதங்கள் தமது சேவையை மீள ஆரம்பித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் புகையிரத தொழிற்சங்க ஊழியர்களுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளனர்.

இதனையடுத்து புகையிரத சேவைகள் படிப்படியாக வழமை நிலைமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை, கண்டி, வவுனியா, புத்தளம் மற்றும் அவிசாவளை ஆகிய பிரதேசங்களுக்கு புகையிரதங்கள் இன்று பிற்பகல் தமது நாளாந்த சேவையை ஆரம்பித்ததாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

நாளை காலை ஏனைய புகையிர சேவைகள் வழமை நிலைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 90 வீதமான புகையிரத சாரதிகள், காவல் உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் கடமைக்கு திரும்பியுள்ளதாக மேலதிக பொது முகாமயாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 19 =

*