;
Athirady Tamil News

மண்சரிவு காரணமாக 100 ற்கும் அதிகமானோர் இடம் பெயர்வு..!!

0

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா, எட்லி தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதனால் டிக்கோயா – சலங்கந்த பிரதான வீதியின் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த மண்சரிவு காரணமாக டிக்கோயா, எட்லி தோட்டத்தில் உள்ள 30 குடும்பங்களை சேர்ந்த 100 ற்கும் மேற்பட்டோரை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வலியுறுத்தபட்டுள்ளது.

இன்று (13) காலை 05.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் மற்றும் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் கணபதி ரவி குழந்தைவேல் ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்று நிலமையை பார்வையிட்டனர்.

பின்னர் அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.டி.பி.சுமனசேகரவின் கவனத்திற்கு இவ்விடயம் தொடர்பில் கொண்டு சென்று மக்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கபட்டுள்ளது.

குறித்து வீதியில் காணப்படும் மண் மேட்டினை அகற்றுவதற்கான நடவடிக்கையினை நோர்வூட் பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − two =

*