;
Athirady Tamil News

கொலை குற்றத்துடன் தொடர்புடைய மூவர் கைது..!!

0

மதுகம, மெனிக்கொட பகுதியில் கொலை குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுகம பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மதுகம, விதான மாவத்தையில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுகம பகுதியை சேர்ந்த 31, 33 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை மதுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 23 ஆம் திகதி வரையில் விளக்ககமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி மதுகம, மெனிக்கொட பகுதியில் மோட்டார் வாகனத்தில் பயணித்த மூவரை வேனில் வந்த இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × four =

*