;
Athirady Tamil News

ஆட்சியில் சாதிக்க முடியாததால் மோடி முதலை கண்ணீர் வடிக்கிறார் – காங்கிரஸ் தாக்கு..!!

0

பிரதமர் மோடி பல்வேறு பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் 4 ஆண்டு ஆட்சி காலத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருப்பதாக கூறி இருந்தார்.

இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா கூறியதாவது:-

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து அதன் பதவி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த கால கட்டத்தில் இந்த ஆட்சியால் ஒரு சாதனை கூட செய்ய முடியவில்லை.

இன்று பொருளாதாரம் மோசமான நிலையில் சென்றுள்ளது. சமூக அமைப்புகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் மறைக்கும் வகையில் கலப்பட மற்ற பொய்களை பிரதமர் மோடி கூறி வருகிறார். கட்டுகதைகளை கூறுகிறார். முதலை கண்ணீர் வடிக்கிறார்.

அவர் சொல்வதையெல்லாம் மக்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார். மக்கள் அவர் மீது நம்பிக்கையை எப்போதோ இழந்துவிட்டார்கள். மோடியின் ஆட்சியின் தோல்வியை மக்கள் மறக்க மாட்டார்கள்.

4 ஆண்டு ஆட்சி காலத்தில் அவர் ஒரு தடவை கூட பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது இல்லை. அவர் கொண்டு வந்த எந்த முன்னோடி திட்டங்களும் வெற்றிபெறவில்லை. குறிப்பாக தூய்மை இந்தியா திட்டம் பெரும் தோல்வி அடைந்து உள்ளது.

ஆட்சிக்கு வந்த புதிதில் 60 மாதத்தில் இந்தியாவை ஒளிரச் செய்வோம் என்று கூறினார்கள். இப்போது அந்த இலக்கை 2022-க்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இன்னும் 9 மாதத்தில் இவர்கள் எதுவும் செய்யப்போவது இல்லை.

ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறினார்கள். இப்போது தொழிலாளர் வைப்புநிதி கணக்குபடி வேலை வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக கூறுகிறார்கள்.

அமைப்புசாரா தொழில்கள் ஒரு அமைப்புக்குள் வரும்போது தொழிலாளர் வைப்பு நிதி துறையில் சேர வேண்டும். அந்த வகையில் அந்த எண்ணிக்கை உயர்வது வழக்கமானது. இதை வைத்துக் கொண்டு வேலை வாய்ப்பு உருவாகி விட்டது என்று எப்படி சொல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − nineteen =

*