;
Athirady Tamil News

உதயதாரகை விளையாட்டு மைதானத்தை பொது விளையாட்டு மைதானமாக மாற்றவேண்டும்..!!

0

உதயதாரகை விளையாட்டு மைதானத்தை பொது விளையாட்டு மைதானமாக மாற்றவேண்டும் பிரதேச சபை உறுப்பினர் சத்தியானந்தன்.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள மருதநகர் உதயதாரகை விளையாட்டு மைதானத்தை பொது விளையாட்டு மைதானத்தை பொது விளையாட்டு மைதானமாக மாற்ற வேண்டும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் அருணாசலம் சத்தியானந்தன் சபையில் தெரிவித்துள்ளார்.

இன்று(13) கரைச்சி பிரதேச சபையின் ஆறாவது அமர்வு தவிசாளர் அ. வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது விளையாட்டு மைதானங்கள் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் ப.குமாரசிங்கம் கொண்டு வந்த பிரேரணை ஒன்றின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஒரு பொது விளையாட்டு மைதானம் இல்லாது இருக்கிறது எனவே உதயதாரகை விளையாட்டு மைதானத்தை பொது விளையாட்டு மைதனமாக மாற்றுவதன் மூலம் இளைஞர்களுக்கான உடல் வலுவூட்டல் நிகழ்வுகளுக் குபயன்படுத்தலாம், அத்துடன் சபைக்கு வருமானத்தையும் ஈட்டுக்கொள்ள முடியும் எனவே இச் சபையான அதனை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

.இது தொடர்பில் உதயதாரகை விளையாட்டுக் கழகத்துடன் பேசிய போது அவர்களும் சாதகமாக பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவும் அவர் குறிப்பிட்டார்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*