;
Athirady Tamil News

இரண்டாம் மொழிக் கற்கையை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது..!! (படங்கள்)

0

இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்த 60 உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் வட மாகாண நிலையத்தில் இரண்டாம் மொழிக் கற்கையை பூர்த்தி செய்த 60 உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

30 பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கும், மற்றும் பிரதேச மாவட்டச் செயலகங்களைச் சேர்ந்த 30 உத்தியோகத்தர்களுக்கும் என 60 தொடர்ச்சியாக பன்னிரணடு நாட்கள் இக் கற்கை நெறியை பயின்றுள்ளனர். தமிழ் உத்தியோகத்தர்கள் சிங்கள மொழியினையும் சிங்கள உத்தியோகத்தர்கள் தமிழ் மொழியினையும் பயின்றுள்ளர்.

இரண்டாம் மொழியில் தொடர்பாடலை மேற்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட பாடநெறிக்கு அமைவாக தொடர்ச்சியாக பன்னிரண்டு நாட்கள் இரணடாம் மொழி கற்கைகள் மேற்கொள்ளப்பட்டு்ளளன.

மேலும் தொடர்ச்சியாக இக் கற்கை நெறி கிளிநொச்சியில் அமைந்துள்ள தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் வடக்கு மாகாண நிலையத்தில் இடம்பெறும் என்றும் அரச உத்தியோகத்தர்கள் தங்களது திணைக்களங்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சின் வடக்கு மாகாண நிலையத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், மாவட்ட சமூர்த்தி உதவிப் பணிப்பாளர் ஆரணி, தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் வடக்கு மாகாண நிலையத்தின் பணிப்பாளர் பிரதிப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 10 =

*