;
Athirady Tamil News

மகிந்தவை சந்தித்து பேசிய மனோ, ஹக்கீம், டக்ளஸ்! வைரலாகும் புகைப்படம்..!!

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளன.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவுடன் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை என அந்த முன்னணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − eleven =

*