அதிகரிக்கும் சிறுமிகள் வன்கொடுமை – 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இருவருக்கு வலைவீச்சு..!!

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு வரும் நிலையிலும் குற்றங்கள் குறையவில்லை என்பதாக தெரிகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், மிரான்பூர் பகுதியில் நேற்று காலை கடைக்கு சென்ற 14 வயது சிறுமி 2 நபர்களால் மோட்டார் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டார். ஒரு ரகசிய இடத்துக்கு அந்த சிறுமியை கொண்டு சென்ற அந்த இருவரும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பிறகு அவர்கள் இருவரும் அந்த பெண்ணை மாலை விடுவித்தனர்.
வீடு திரும்பிய சிறுமி நடந்தவற்றை கூற அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து தஜிம், மற்றும் ஃபிரோஸ் ஆகிய இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்த இருவரையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.