;
Athirady Tamil News

யாழ் சிறைச்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கு வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்..!!

0

யாழ் சிறைச்சாலை வளாகத்தில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

அதன் பிரகாரம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலை வளாகம் அனுமதி இன்றி அமைக்கப்பட்டது. அதற்கு யாரால் அனுமதி வழங்கப்பட்டது என்பது தெரியாத நிலையில், அங்கு தற்போது மேலதிக கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் சிறைச்சாலை இராஜ வீதிக்கு மாற வேண்டும், அங்கு தான் அதற்கான காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே மேலதிக எந்த கட்டட நடவடிக்கைகளும் மேற்கொள்ள கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள் உட்பட பலர் எதிர்ப்பு வெளியிட்டனர்.

அதுமட்டுமன்றி உரிய சட்ட ஆலோசனைகளை பின்பற்றி வழக்கு தொடுக்க வேண்டும் என்று சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*