;
Athirady Tamil News

வவுனியாவில் வெளிவிவகார அமைச்சர் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்து ஆராய்ந்தார்..!! (படங்கள்)

0

வவுனியாவுக்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்வருகைக்கான நிலைமை குறித்தும், இராணுவத்தினால் கையளிக்கப்பட்ட காணிகள் அவற்றின் உரிமையாளர்களைச் சென்றடைந்திருக்கின்றதா என்பது குறித்தும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், இரு மாவட்டங்களினதும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து ஆராய்ந்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்தி;ப்பிற்காக வருகை தந்த அமைச்சரை, வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.எல்.எம்.ஹனிபா மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் ஆகியோர் மாலை சூட்டி வரவேற்றனர்.

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசாங்கம் உறுதியளித்திருக்கின்ற நிலையில் அந்தக் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றதா என்பதைக் கண்டறிவது தமது விஜயத்தின் நோக்கங்களில் ஒன்று என்று அமைச்சர் திலக் மாரப்பன இந்தச் சந்திப்பின்போது தெரிவித்தார்.

படையினர் வசமுள்ள காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றது. தங்கள் வசமுள்ள காணிகளில் 90 வீதமானவற்றை மீளளித்துவிட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் காணிகள் அரசாங்க அதிபர்களின் பொறுப்பில் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, இந்தக் காணிகள் உண்மையான உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றனவா என்ன நடந்துள்ளது என்பது பற்றிய விபரங்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெரிவி;கக வேண்டியுள்ளது.

அதேநேரம் இந்தக் காணிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்தக் காணிகளில் குடியேற்றப்பட்டிருக்கி;ன்றார்களா என்ற விபரங்களும் தேவை.

அதேவேளை, இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர்கள் பலர் நாட்டுக்குத் திரும்பியிருக்கின்றார்கள். இவ்வாறு திரும்பியுள்ளவர்களுக்கு மன்னாரில் நடைபெற்ற தூதரக மட்டத்திலான ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்குரிய நடமாடும் சேவையையும் சென்று பார்வையிட்டேன்.

இந்தியாவில் இருந்து திரும்பியுள்ள குடும்பங்களுடைய காணிகளும் படையினர் வசமுள்ளதாகவும், அந்தக் காணிகள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களினது காணிகளும் படையினரால் மீள கையளிக்கப்படவில்லை என முறையிடப்பட்டிருக்கின்றது.

இந்த விடயங்களில் இரண்டு மாவட்டங்களிலும் என்ன நடந்துள்ளது விபரங்கள் என்ன என்பதையும் அறிவதே எனது விஜயத்தின் நோக்கம் என்று அமைச்சர் அதகாரிகளிடம் கூறினார்.

வவுனியா மாவட்டத்தில் 2009 தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையில் 9139..39 எக்கர் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றில் 48.24 ஏக்கர் காணிகள் பேமிட் வழங்கப்பட்டதும் ஆகும். தனியாருக்குச் சொந்தமானதும் காணிகள் தனியாருடையவைஉரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாகவும், மிகுதி காணிகள் யாவும் அரச மற்றும் வன பரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள் என்றும் இந்தச் சந்திப்பின்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்களுடைய காணிகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டு, அவற்றில் அவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளினால் தெரிவி;க்கப்பட்டது.

பொதுமக்களுக்குச் சொந்தமான 62.13 ஏக்கர் காணிகள் இன்னும் மீளளிக்கப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 3183 ஏக்கர் காணிகள் படையினர் வசம் இருக்கின்றன. இவற்றில் 967 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

மன்னார் மாவட்டத்தில் மொத்தம் 3345 ஏக்கர் காணிகள் படையினர் வசம் இருக்கின்றன இவற்றில் 998.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இவற்ற்pல் 30.75 ஏக்கர் காணிகளே பொதுமக்களுடையவை என்;றும் அந்தக் காணிகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடப்பட்ட காணிகளில் பொதுமக்களுடையவை தவிர, ஏனையவை அரச மற்றும் தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்குச் சொந்தமானவை என்றும் அதிகாரிகளினால் தெரிவி;க்கப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*