;
Athirady Tamil News

நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் – சட்ட ஆணையத்துக்கு அமித்ஷா கடிதம்..!!

0

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி சட்ட ஆணையம் ஆய்வு செய்துவருகிறது. இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பு அனைத்து கட்சிகளின் கருத்தையும் கேட்க முடிவு செய்தது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, பா.ஜனதா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் விஜய் சஹஸ்ரபுத்தே, பூபேந்தர் யாதவ், அனில் பலுனி உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் சட்ட ஆணைய தலைவர் பி.எஸ்.சவுகானை சந்தித்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

இந்த கருத்தை வலியுறுத்தி பாஜக நாளை முதல் 30-ம் தேதி வரை சமூக நீதி இயக்கம் நடத்த உள்ளது.

இந்நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா சட்ட ஆணையத்துக்கு 8 பக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது எங்கள் கருத்து மட்டுமல்ல, இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கொள்கை முடிவு. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும். அதேபோல ஆண்டு முழுவதும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெற்று வருவதும் தவிர்க்கப்படும்.

இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது என்பது ஆதாரமற்ற வாதம். மாறாக இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும். இதுபற்றிய எதிர்க்கட்சிகளின் கருத்து அரசியலுக்காக கூறப்படுவதாகவே தெரிகிறது என கூறியுள்ளார்.

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சமீபத்தில் சட்ட ஆணையத்தை சந்தித்து, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 15 =

*