;
Athirady Tamil News

தனியாரிடமிருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள தலையீடு செய்ய கோரிக்கை..!!

0

தனியார் மின் பிறப்பாக்கிகள் மூன்றிடமிருந்து மின் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணக்கத்தைப் பெற்றுக் கொள்ள தலையீடு செய்யுமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு ஜனாதிபதி செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளரால் ஜனாதிபதி செயலாளரிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் மின் பிறப்பாக்கிகள் மூன்றிடமிருந்து மின்சாரம் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்ட போதிலும் இதுவரை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணக்கம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தலைமை வகிக்கு பொருளாதார குழுவில் அதற்கான அனுமதியைப் பெற்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணக்கத்தைப் பெற்றுக் கொள்ள தலையீடு செய்யுமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடியாது போனால் நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என்று மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − fourteen =

*