;
Athirady Tamil News

வேலையற்ற பட்டதாரிகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு..!! (படங்கள் & வீடியோ)

0

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் எதிர்வரும்-20 ஆம் திகதி வழங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகள் தொடர்பிலும் சுட்டிக் காட்டி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் நேற்றைய தினம்(13) இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

யாழ்ப்பாணம் 3 ஆம் குறுக்குத் தெருவிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்திற்குச் சென்ற வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் சார்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்ஜிடம் முறைப்பாட்டு மகஜரொன்றைக் கையளித்தனர்.

தனிப்பட்ட ரீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை எழுத்துவடிவில் முறைப்பாடுகளை வழங்குமிடத்துத் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் பாதிக்கப்பட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்குத் தெரிவித்தார்.

இதனையடுத்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு பகுதியினர் தனித்தனியான முறைப்பாட்டுக் கடிதங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.

முறைப்பாட்டுக் கடிதங்களைப் பெற்றுக் கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தார்.

மேலும் வடமாகணத்தில் 7000 வேலை வாய்ப்புக்கள் வெற்றிடமாக காணப்படுகின்ற நிலையில் வடமாகானசபை அதற்க்கான முயற்ச்சிகள் எதனையும் முன்னெடுக்காமல் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*