;
Athirady Tamil News

செட்டிகுளம் பிரதேச சபையின் முறையற்ற கழிவு முகாமைத்துவத்தால் தொற்று நோய் பரவும் அபாயம்..!! (படங்கள்)

0

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையினால் முறையாக கழிவுகள் முகாமைத்துவம் சொய்யப்படாமையால் தொற்று நோய் தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையால் அகற்றப்படும் கழிவுகள் செட்டிகுளம், பெரியகட்டு பகுதியல் கொட்டப்படுகின்றது. அகற்றப்படும் கழிவுகள் தரம் பிரிக்கப்படாமையும், வகைப்படுத்தபடாமையும் ஓரே இடத்தில் வீசப்படுகின்றது. குறிப்பாக அண்மையில் வீசப்பட்ட கழிவுகளில் மருத்துவ கழிவுகள், சிரிஞ், மருந்து கட்டிய துணி வகைகள், பிளாஸ்டிக் பொருட்கள், சேலன் வெற்றுப் போத்தல்கள், பிரதேச செயலக ஆவணங்கள் என பல பொருட்கள் ஓரே இடத்தில் வீசப்பட்டுள்ளன.

தற்போது அதிகரித்துள்ள காற்று காரணமாகவும், விலங்குகள் மூலமாகவும் அக் கழிவுப்பொருட்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு காவிச் செல்லப்படுகின்றன. இதனால் பெரியகட்டு, கணேசபுரம், கன்னாட்டி ஆகிய கிராமங்களில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 11 =

*