;
Athirady Tamil News

பெண்களின் பிரச்சினைகளில் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் பிரதேச சபை உறுப்பினர் செல்வராணி..!!

0

கிளிநொச்சி மாவட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் தர்மலிங்கம் செல்வராணி பிரேரணை ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.

நேற்று(13) கரைச்சி பிரதேச சபையின்ஆறாவது அமர்வின் போதே அவர் இப் பிரேணையை முன்வைத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெண்கள் குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத மதுபான உறபத்தி, தொழில் வாய்ப்பின்மை, போன்றவற்றாலும், ஏனைய காரணிகளாலும் அவர்கள் எதிரகொள்ளும் பிரச்சினைகளை கையாள்வதற்கு விசேட அலகொன்றை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர்

கிளிநொச்சியில் பெண்களினால் உற்பத்தி செய்யப்படுகின்ற உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு பொதுச் சந்தையில் இடம் ஒன்றினையும் ஒதுக்கீடு செய்து தருவதோடு, புதிதான அமைக்கப்பட்டு வருகின்ற கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரத்தியோகமாக அறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரினார்.

இதனை கரைச்சி பிரதேச சபை ஏற்றுக்கொண்டதோடு, ஏற்கனவே காணப்படுகின்ற நான்கு குழுக்களுக்கு மேலதிகமாக ஜந்தாவது குழு ஒன்றையும் உருவாக்கி பெண்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*