;
Athirady Tamil News

வல்லப்பட்டை மற்றும் கோகும் பட்டை ஒரு தொகையுடன் நபரொருவர் கைது..!!

0

வல்லப்பட்டை மற்றும் கோகும் பட்டை ஒரு தொகையை சட்டவிரோதமான முறையில் பெங்கொக் நோக்கி எடுத்துச்செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (13) மதியம் 2.20 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 406 என்ற விமானத்தில் தாய்லாந்தின் பெங்கொக் நோக்கி பயணிப்பதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் எடுத்து வந்த பையில் இருந்து 5,75,000 ரூபா பெறுமதியான வல்லப்பட்டை 7 கிலோவும் 400 கிராமும் கோகும் பட்டை 17 கிலோவும் 400 கிராமும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வல்லப்பட்டை மற்றும் கோகும் பட்டை தொகை அரசுடமையாக்கப்பட்டதுடன், சந்தேக நபருக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*