;
Athirady Tamil News

சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது..!!

0

கொஸ்லந்த, ஊவ மாவெலகம பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை கொஸ்லந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வருவாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தியஇட்டிதென்ன பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை பண்டாரவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கொஸ்லந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*