;
Athirady Tamil News

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!!

0

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் தெதுரு ஓய பாலத்திற்கு அருகில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (14) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இரு பேருந்துகள் மற்றும் இரு மோட்டார் வாகனங்களே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன.

வாகன நெரிசல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தின் மீது நீர்கொழும்பில் இருந்து கல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மோதியுள்ளது.

இதனால் குறித்த மோட்டார் வாகனம் முன்னால் நிறுத்தப்பட்டிருந்து பேருந்துடன் மோதியுள்ளது. பின்னர் குறித்த பேருந்து முன்னால் இருந்த மோட்டார் வாகனத்துடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பில் இருந்து கல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்தை தவிர ஏனைய வாகனங்கள் மூன்றும் ராஜகிரியவில் இருந்து மடு தேவலாயத்திற்கு சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 6 =

*