;
Athirady Tamil News

யாழ் மாவட்ட செயலகத்தில் நெற்பயிற்ச்செய்கைக்கு சேதனமுறையிலான விவசாயத்தினை எற்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடல்..!! (படங்கள்)

0

யாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்கு,மற்றும் வெங்காயம்,மிளகாய் அறுவடைகளின் பின்னர் கிடைக்கின்ற உத்தரவான விலை நிர்ணயத்தினை அரசாங்கம் விவசாயிகளுக்கு வருவார்களானல் எமக்கு அரசாங்கத்தினால் தருகின்ற மானிய அடிப்படையிலான உதவிகள் ஏவையும் தேவையில்லை என விவசாயிகள் ஐனாதிபதி செயலகத்தின் நுகர்வு ஆண்மை தொழில் முயற்சி முகாமைத்துவ ஆராய்ச்சியின் தவிசாளர் அசோக்க அபயகுணவர்த்தனவுக்கு எடுத்துரைப்பு…

ஐனாதிபதி செயலகம்,மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் எற்பாட்டில் வருகின்ற காலபோகத்தில் யாழ் மாவட்ட விவசாய நெற்பயிற்ச்செய்கைக்கு சேதனமுறையிலான விவசாயத்தினை எற்படுத்தல் என்னும் கருப்பொளிலான உயர் மட்டக்கலந்துறையாடல் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலுக்கு ஐனாதிபதி செயலகத்தின் நுகர்வு ஆண்மை தொழில் முயற்சி முகாமைத்துவ ஆராய்ச்சியின் தவிசாளர் அசோக்க அபயகுணவர்த்தன கலந்துகொண்டார்.

கலந்துரையாடுகையில் அவர்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர்..இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் தற்போது விவசாயிகள் எதிர்நோக்கின்ற பல்வேறு பிரச்சனைகளில் இவ்வாறான விலை நிர்ணயம் என்பது பாரதூரமானதாக காணப்படுகின்றது.இதற்கான ஆவணம் செய்து தருவருமாறு அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்..

இச் உயர் மட்டக்கலந்துறையாலில் விவசாயிகள் சேதனப்பசளை கிடைக்கின்ற வழிவகைகள்,மற்றும் இராசாஐன முறையில் எற்படுத்துகின்ற பாதிப்புக்கள்,மற்றும் எற்றுமதி,சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறுவிடையங்கள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

குறித்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம்,மற்றும் மாவட்ட செயக விவசாயப்பணிப்பாளர் கைலேசநாதன்,மற்றும் பிரதேசசெயலாளர்கள்.விவசாய அமைப்புக்கள் பிரதி நிதிகள்,பலரும்கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + eighteen =

*