;
Athirady Tamil News

மடு திருத்தல வருடாந்த ஆவணித்திருவிழா – நாளை கூட்டுத்திருப்பலி..!!

0

வரலாற்றுச் சிறப்பு மிக்க மடு தேவாலயத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா நாளை ஆயர்களின் கூட்டுத் திருப்பலியாக இடம்பெறவுள்ளது.

வருடந்தோறும் பெருவிழாவாகக் கொண்டாடப்படும் மடுத் திருத்தல ஆவணி பெரு விழாவானது கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று மாலை விசேட நற்கருணை ஆராதனையும், பவனியும் நற்கருணை ஆசீர்வாதமும் இடம்பெற உள்ளதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை தெரிவித்துள்ளார்.

நாளை காலை 6.30ற்கு ஆயர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டைவிட இம்முறை ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மடு ஆலய திருவிழாவிற்கு வருகை தந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − five =

*