;
Athirady Tamil News

தெல்­லிப்­ப­ழை­யில் நான்கு வீடு­கள் மீது ஒரே இர­வில் கைவ­ரிசை..!!

0

தெல்­லிப்­ப­ழைப் பொலிஸ் பிரி­வுக்­குட்பட்ட பகு­தி­க­ளில் கொள்­ளைக்கும்­ப­லின் அட்­ட­கா­சம் கடந்த இ­ரண்டு நாள்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த சனிக்­கி­ழமை அதி­காலை தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­யில் உள்ள நான்கு வீடு­க­ளில் புகுந்த கொள்­ளை­யர்­கள் வீட்­டா­ரைத் தாக்கிப் பெரு­ம­ளவு நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­னர் என்று தெல்­லிப்­ப­ழைப் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்ளது.

யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துள்ள வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைத் தடுக்­கும் நோக்­கில் பொலி­ஸார் ரோந்து நட­வ­டிக்­கை­களை மேற்கொண்­டுள்ள போதி­லும், தெல்­லிப்­ப­ழை­யில் நடந்த இந்­தச் சம்­ப­வம் மக்­களை அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கி­யுள்­ளது.

தெல்­லிப்­பழை வித்­த­க­பு­ரம் பகு­தி­யில் உள்ள வீடு ஒன்­றின் கத­வு­களை உடைத்­துக் கொண்டு 8 பேர் கொண்ட குழு­வி­னர் வீட்­டி­னுள் புகுந்­த­னர். அவர்­கள் கைக்­கோ­டரி, கொட்­டன் கோன்ற ஆயு­தங்­க­ளால் வீட்­டா­ரைத் துரத்­தித் தாக்­கி­னர். காய­ம­டைந்த அவர்­கள் ஓடிச்­சென்று வீட்­டின் ஒரு அறை­யைப் பூட்டி அத­னுள் பதுங்­கி­னர்.

அதன் பின்­னர் வீட்­டின் சாமி அறைக் கதவு கொள்­ளை­யர்­க­ளால் தகர்க்­கப்­பட்­டது. அங்­கி­ருந்த 12 பவுண் நகை­கள் அப­க­ரிக்­கப்­பட்­டன. அதன் தொடர்ச்­சி­யாக அந்­தப் பகு­தி­யி­லேயே மேலும் மூன்று வீடு­க­ளில் கொள்­ளை­யர்­கள் தமது கைவ­ரி­சை­யைக் காட்­டிச் சென்­றுள்­ளர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எனி­னும் அது பற்­றிய விவ­ரங்­கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தெல்­லிப்­ப­ழைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­துள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

நேற்று முன்­தி­ன­மும் தெல்­லிப்­ப­ழை­யில் கொள்­ளை­யர்­கள் புகுந்­துள்­ள­னர். முகத்தை மூடிக்­கட்­டி­ய­வாறு கொள்­ளை­ய­டிக்­கும் நோக்­கில் அவர்­கள் உலா­வி­யுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அள­வெட்டி, பன்­னாலை, கொல்­லன்­க­லட்டி போன்ற பகு­தி­க­ளில் கொள்­ளை­யர்­க­ளின் நட­மாட்­டம் இருந்­தது என்று மக்­கள் தெரி­வித்­த­னர். கடந்த சனி, மற்­றும் ஞாயிற்­றுக் கிழ­மை­க­ளில் இடம்­பெற்ற இந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் பொலி­ஸா­ரால் நட­வ­டிக்­கை­கள் எது­வும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

யாழ்ப்­பா­ணத்­தின் பல பிர­தே­சங்­க­ளி­லும் வன்­மு­றை­கள் கட்­ட­வி­ழித்து விடப்­பட்­டுள்­ளன. வாள்­வெட்டு முதல், திருட்டு, வழிப்­பறி வரை அது அதி­க­ரித்தே செல்­கி­றது. பொலி­ஸார் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளோம் என்­கின்ற போதும், சம்­ப­வங்­கள் நிறுத்­தப்­பட்­ட­தாத் தெரி­ய­வே­யில்லை, இது மக்­கள் மத்­தி­யில் மேலும் அச்­சு­று­த­தலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 1 =

*