;
Athirady Tamil News

500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் மூழ்கிப் போன சீனாவின் ஆச்சரியம்…!!

0

500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் மூழ்கிப் போன சீன கப்பலை தேடும் பணிகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.அல்லைப்பிட்டி பகுதியில் மூழ்கிய கப்பலை, இலங்கை சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து தேடவுள்ளனர்.500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியுள்ளதாகவும் அதன் எச்சங்கள் அல்லைப்பிட்டி அப்பகுதியில் இருப்பதாகவும் சீன அரசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக அந்தப் பகுதியில் ஆய்வு நடவடிக்கைகளை, 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சீன அதிகாரிகள் மேற்கொண்டனர்.

குறித்த ஆய்வின்போது சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் மீட்கப்பட்டன. அப்பகுதியில் ஆய்விற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக குறித்த ஆய்வுப் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் அல்லைப்பிட்டி பகுதியில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனடிப்படையில் சீன மற்றும் இலங்கை நாடுகளின் தொல் பொருள் திணைக்களங்கள் இணைந்து தற்போது அல்லைப்பிட்டி கடற்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*