;
Athirady Tamil News

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டு மத்திய அரசு கவிழ்ந்தால் மாநில அரசுகளும் கலைக்கப்படுமா ? – மம்தா..!!

0

பாராளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் தனி தனியாக தேர்தல் நடத்துவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இந்த செலவை குறைத்தால் மீதமாகும் பணத்தை பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு செலவிட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இதையடுத்து ’ஒரு நாடு ஒரு தேர்தல்’ என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கூறி வருகிறது. அதன் பரிந்துரையை ஏற்று சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மிகப்பெரிய ஆய்வை நடத்தியது. அதில், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இருந்து ’ஒரு நாடு, ஒரு தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று தேர்தல் கமி‌ஷன் கூறியது.

ஆனால், இந்த திட்டத்தை இதுவரை பெரும்பாலான கட்சிகள் ஏற்கவில்லை. இதனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு இது வரை ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் தேர்தல் நடந்து, ஒருவேலை மத்திய அரசு கவிழும் பட்சத்தில் மாநில அரசுகளும் சேர்ந்து கலைக்கப்படுமா ? எனும் கேள்வியை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ’பாராளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடத்துவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டப்படி தேர்தல் நடத்தப்பட்டு ஒருவேலை மத்தியில் ஆளும் அரசு கவிழும் பட்சத்தில் மாநில அரசுகளும் சேர்த்து கலைக்கப்படுமா? எனவே, தயவுசெய்து நடைமுறைக்கு ஏற்றபடி யோசியுங்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின்படி, உள்ளாட்சி தேர்தல்களை வேண்டுமானால் நடத்திக்கொள்ளலாம். இந்தியா கூட்டாட்சி தத்துவ அமைப்பு கொண்ட ஒரு பரந்த நாடாகும், இங்கு பல்வேறு மதங்கள், பல்வேறு சூழ்நிலைகள் உள்ளன. இதை அடிப்படையாக வைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அவர்கள்(மத்திய அரசு) மாநில கட்சிகளுடன் அலோசிக்கவில்லை, பாராளுமன்றத்திலும் இதை அவர்கள் விவாதிக்க மாட்டார்கள்’ என மம்தா தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + two =

*