;
Athirady Tamil News

பலத்த காற்றினால் 80 இற்கும் அதிகமான வீடுகள் சேதம்..!!

0

பலத்த காற்றினால் குருணாகல், வீரம்புகெதர பகுதியில் 80 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இருவர் காயங்களுக்கு உள்ளாகி குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (15) காலை ஏற்பட்ட பலத்த காற்றினால் வீரம்புகெதர, உடுகம, கதுருவெல்ல, எல்கம, செவென்தன ஆகிய பகுதிகளில் இருந்த பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

மரம் முறிந்து விழுந்ததில் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 14 =

*