;
Athirady Tamil News

வவுனியாவில் மின்சாரத்தில் சிக்கிய குரங்கு உயிரிழப்பு..!! (படங்கள்)

0

வவுனியா புகையிரத நிலைய வீதியில் செல்லும் லக்ஸ்சபான மின் வயறில் நடந்து சென்ற குரங்குகளில் ஒன்று தவறியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

புகையிரத நிலைய வீதியில் இன்று காலை லக்சபான மின்சாரம் பிரதான மின்பிறப்பாக்கிக்குச் செல்லும் கம்பி வயறில் நடந்து சென்ற குரங்குகளில் ஒன்று தவறி கீழ் செல்லும் கம்பியில் மின்சாத்தில் சிக்கி உயிரிழந்து கீழே வீழந்த நிலையில் காணப்படுகின்றது.

இவ்வாறு வீதியில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளதையடுத்து நகரசபையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எவையும் இடம்பெறவில்லை பிரதான வங்கியில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குச் செல்லும் மக்களுக்கு அசௌகரிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − four =

*