;
Athirady Tamil News

திட்டங்கள் பேச்சளவிலேயே உள்ளன; திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் கவலை..!!

0

பொதுமக்கள் தனியார் பங்களிப்புடனான திட்டங்கள் பேச்சளவிலும் எழுத்து வடிவிலும் உள்ளது அது முழுமையாக நடைமுறையில் இல்லாதது. பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது.

இவற்றை சீர்படுத்தவே திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் மேற்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டம் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தனியார் பங்களிப்பை நடைமுறைக்கு கொண்டுவரும் முதற்படியாக இச் செயற்திட்டம் அமையும் என திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கே.குலதீபன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற சிறுமற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு திட்டத்தின் முதலாவது அமர்வு திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட போது இந்நிகழ்வக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்த்தண மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மற்றும் நிதிநிறுவன பிரதிநிதிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் திணைக்கள தலைவர்கள் தனியார் நிறுவன உரிமையாளர்கள் அரசார்பற்ற நிறுவனங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய வர்த்தக சம்மேளனத் தலைவர் கே. குலதீபன்

திருகோணமலை மாவட்டத்திற்குள் பொருளாதாரம் வரும் 04 வழிகளாக ஒப்பந்த வேலைகள், உல்லாச பயணத்துறை, விவசாயம் மீன்பிடி கைத்தொழில் முயற்சிகள் மூலம் இதில் கைத்தொழில் நிலையங்கள் அதிகமாக வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் வசமே உள்ளது.

ஒப்பந்த வேலையும் உல்லாசத்துறையும் உள்ளூர் மக்களால் மேற் கொள்ளப்படுவதால் அதன் மூலம் உருவாகும் பொருளாதாரம் மாவட்டத்திற்குள் காணப்பட வாய்ப்பள்ளது.சில நடைமுறைகளாலும் தவறான வழிநடத்தலாலும் அதிலும் சில பிரச்சினைகள் காணப்படுகின்றது.

இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் வர்த்தக சம்மேளனங்கள் இம்மாவட்டங்களில் உற்பத்தியாகும் பொருற்களை ஏற்றுமதி செய்தல் மற்றும் இறக்குமதி வரை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதன் மூலம் உள்ளூர் வர்தக்கர்கள் முழுமையாக நன்மையடைவர்கள்.

இந்த நிலையை திருகோணமலையிலும் ஏற்படுத்த வேண்டும் அதற்கான முயற்சிகளை நாம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றோம்.என வர்த்தக சம்மேளனத் தலைவர் கே.குலதீபன் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − two =

*