;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் பயணிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை…!!

0

யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு
விமானம் மூலம் பயணிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

யாழ் இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன்

யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் பயணிக்கவும் . கப்பல் மூலம் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. என யாழ் இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணம் துணைத் தூதுவராலயத்தில் 15.08.2018 [இன்று ] காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் இந்திய இல்லத்தில் இடம்பெற்றது . இவ் நிகழ்வில் தலைமை அதிதியாகக் கலந்து கொண்டு இந்திய தேசியக் கொடியையோ ஏற்றி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

சுதந்திர காலத்திற்கு முற்பட்ட வரலாற்றுக் காலம் முதல் இன்றைய காலம் வரை இலங்கை இந்திய உறவானது பிரிக்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்தது நாம் எல்லோரும் அறிந்ததே . இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து இன்றுவரை தமது சேவைகளை வடமாகாண மக்களுக்காக வழங்கி வருகின்றது.
அண்மையில் பாரதப் பிரதமர் காணொளி மூலமாக இலங்கை பிரதமருடன் இணைந்து திறந்து வைத்த இலவச சுகப்படுத்தும் சேவை என்கின்ற அவசர கால நோயாளர் வண்டிச் சேவை. ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அறுநூறு மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பணம் பல்கலைக் கழக கிளிநொச்சி வளாகத்தில் விவசாயம் மற்றும் பொறியியல் பீடம் என்பன வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றன .பாடசாலைகளின் கட்டட புனரமைப்புக்காக 187 ரூபா மில்லியன் செலவிடப்பட்டு அதில் . 29 பாடசாலைகளின் கட்டடங்கள் புனரமைக்கப் பட்டுள்ளன. அடுத்த கட்டமாக
250 மில்லியன் ரூபா செலவில் வடமாகாணத்தில் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு வகுப்பறைத் தொகுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. அண்மையில் 8 பாடசாலைகளின் கட்டடத் தொகுதிகள் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப் பட்டுள்ளதுடன் ஏனைய பாடசாலையின் வகுப்பறைக் கட்டடத் தொகுதிகளும் மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப் படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் .

இலங்கையின் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களிற்கு 150 க்கும் மேற்ப ட்ட புலமைப் பரிசில் இந்திய அரசினால் வழங்கப் பட்டு வருகின்றது. மேலும் இலங்கை அரசாங்கத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் தங்கள் திறமைகளை ஆளுமைகளை செயற்திரனை வளர்த்துக் கொள்வதற்கான தொழில் நுட்ப குறுங்கால பயிற்சிக்கான புலமைப் பரிசில்களும் வழங்கப்பட்டு வருகின்றது. சர்வதேச யோகா தினத்தில் வடமாகாணத்தில் அனைத்து மாவட் டத்திலும் மாணவர்களை ஆரோக்கியமாக கல்வி கற்க யோகா பயிற்சி நடாத்தவும் , மாணவர்கள் பங்கு கொள்ளவும் அதற்கான ஏற்பாடுகளை இந்திய துணைத் தூதரகம் வழங்கி வருகின்றது.

அண்மைய அபிவிருத்தி திட்டங்களின் வரிசையில் 160 கோடி ரூபா செலவில் கட்டப் ப பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார நிலையம் கட்டட பணிகள் விரைவு படுத்தப் பட்டுஉள்ளன . அதன் வளர்ச்சியை நான் கண்கூடாகவே பார்க்க முடிந்தது.

முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு , 150 மீன்பிடி படகுகளும் , 300 மீன் பிடி வலைகளும் 150 மில்லியன் ரூபா செலவில் வழங்கப் படவுள்ளன. நான் புதிதாக கடந்த மாதம் பதவி ஏற்றமையினை தொடர்ந்து மக்களின் தூதரக சேவைகள்; மற்றும் தனிப்படட சேவைகளின் அடிப்படையில் மக்கள் சந்திப்பு நேரமாக க ஒவ்வொரு புதன் கிழமையும் ஒதுக்கப் பட்டுள்ளது.

மக்கள் முன் அனுமதி இன்றி நேரடியாக சந்தித்து கலந்துரையாட ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது . மேலும் தங்களின் குறைகளை வேண்டுகோள்களை முன் வைக்கும் வகையில் விசா அலுவலகத்திலும் தூதரகத்திழும் பரிந்துரைப் பெட்டிகள் வைக்கப் பட்டுள்ளன. அதில் மக்களின் பரிந்துரைகள் நேரடியாக என்னால் பரிசீலிக்கப் படும் , அந்த வகையில் மக்கள் எந்தவித தயக்கமும் இன்றி பரிந்துரைகளை கடிதத்தின் மூலம் தெரிவிக்க முடியும் .

வடமாகாணத்தில் பெரும்பான்மை மக்களின் மொழியாக தமிழ் மொழியே முன்னிலையில் உள்ளது . இருப்பினும் அலுவலக மொழியாக ஆங்கில மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும் , தமிழ் மொழியை பயன் படுத்த முடியாதோ என்ற ஐயமும் தமிழ் மக்களிடம் உண்டு . தூதரகத்தை பொருத்தவரையில் மக்கள் தொடர்பாடலுக்கு எந்த வித தடையும் இல்லாமல் தமிழ் மொழியை மக்களை பயன்படுத்த முடியும் . தூதரகத்தின் தொடர்பாடல் மொழியாக தமிழ் மொழியே நடைமுறையில் இருக்கும் தூதரகத்தினால் அனுப்பப்படும் அவசரமான கடிதங்கள் தவிர்ந்த ஏனைய யாவும் தமிழ் மொழியில் அமையும் என்பதனை இவ்வேளையில் தெரிவிதத்துக் கொள்கின்றேன் . .

கலை கலாசார பண்பாட்டினை தேடும் அடிப்படையில் தூதரகமானது வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நல்லூர் உற்சவ காலத்தில் கடந்த 6 வருடங்களாக தெய்வீக சுகானுபவம் என்னும் கலை நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.இவ்வருடமும் இவ் நிகழ்வு இடம்பெற உள்ளது

எதிர்காலத் திட்டங்களின் அடிப்படையில் யாழ் பல்கலைக் கழக இசைத்துறை , நடனத்துறை , சித்த மருத்துவ பிரிவு இந்து நாகரிக துறை முகாமைத்துவ பீடம் கணித்து துறைக்கான பணத் தேவைக்கான வேண்டுகோள்கள் முன் வைக்கப் பட்டுள்ளன. அவற்றிற்கு எம்மால் இயன்ற முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன .

மேலும் வடமாகாணத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கான முக்கிய விடயங்களாக வடமாகாண மக்களுக்கான காங்கேசன்துறை மற்றும் பலாலி விமான நிலையம் என்பன இலங்கை அரசின் வேண்டு கோளுக்கு அமைய ஆரம்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் சகல வழிகளிலும் இடம் பெற்று வருகின்றன

.விரைவில் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் பயணிக்கவும் . கப்பல் மூலம் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதுடன் யாழ் இந்திய துணைத் தூதரகமானது தொடர்ந்தும் வடமாகாண அபிவிருத்திக்கு பங்களிப்பினை வழங்கும் என்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + five =

*