;
Athirady Tamil News

ஊத்துமலை அருகே கள்ளக்காதல் வெளியே தெரிந்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை..!!

0

நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகராஜ் (வயது25). திருமணமாக வில்லை. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு திருமணமான பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

சம்பவத்தன்று முருகராஜ் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கள்ளக்காதலில் ஈடுபட்டதை அந்த பெண்ணின் உறவினர்கள் பார்த்து சத்தம் போட்டனர். மேலும் இது குறித்து முருகராஜின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடமும் தெரிவித்தனர். இதில் அவமானம் அடைந்த முருகராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக ஊத்துமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*