;
Athirady Tamil News

கிளிநொச்சி 155 ஆம் கட்டையில் அமைக்கப்பட்டிருக்கும் புகயிரதக்கடவை சீராக இயங்குவதில்லை..!!

0

கிளிநொச்சி 155 ஆம் கட்டை பாரதிபுரத்திற்கு செல்லும் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் புகயிரதக்கடவை சமிக்கை சீராக இயங்குவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

விவேகானந்த நகர், பாரதிபுரம், கிருஸ்ணபுரம். மலையாலபுரம். விநாயகபுரம், அம்பாள்குளம் பேன்ற கிராமங்களுக்கு செல்லும் மக்கள் இவ் வீதியினை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது இருப்பினும் குறித்த புகயிரதகடவை சீராக இயங்குவதில்லை எழுப்பப்பட ஒலியாது சரியாக கேட்ப்பதில்லை எனவும் கடவையை புகயிரதம் அண்மிக்கும் போதே சமிஞ்சை விழக்குகள் ஒளிர்வதனால் விபத்துக்கள் ஏற்ப்படுகின்றன எனவும் தெரிவிக்கின்றனர் இன்று கூட இவ் புகையிரத சமிக்கை தொடர்ந்தும் சிவப்பு நிற சமிக்கை காட்டிய வாறு உள்ளது எனவும் இதனால் பயந்து பயந்தே கடக்க வேண்டி உள்ளதாக தெரிவிக்கின்ற்னர்.

அத்தோடு புகையிர கடவைக்கு ஒரு ஊழியர் நியமிக்கப்படுவார் ஆனால் இந்த கடவையில் ஊழியர் எவரும் இல்லை என்பதுடன் இந்த கடவையில் புகையிரதத்தில் மோதுண்டு பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பழுதடைந்த இவ் சமிக்கை விளக்குகளை மீள மீள சீர் செய்யாது எமது மக்களின் உயிர்களைக் கருத்தில் கொண்டு புதிய சமிக்கை விளக்கினை பொருத்துவதோடு பாதுகாப்பு கடமைக்கு ஊழியர் ஒருவரையும் நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*