;
Athirady Tamil News

சீனாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகைக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

0

சினிமா துறையில் இருப்பவர்கள் குறுகிய காலத்தில் மிக அதிக பணம் சம்பாதிக்கின்றனர். அப்படி சீனாவில் மிக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகை Fan Bingbing.

இவர் 2016 வெளியான “I Am Not Madame Bovary” மற்றும் X-Men: Days of Future Past போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் வரி ஏய்ப்பு செய்வதற்காக ஒரே படத்தில் இரண்டு விதமாக காண்ட்ராக்ட் மூலம் சம்பளம் வாங்கியது பற்றி சில ஆவணங்கள் மீடியாவில் வெளியானது.

அவர் ஒன்றை மட்டுமே வரி செலுத்த காண்பித்துள்ளார். மற்றொன்றை அப்படியே மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளார். இதனால் Fan Bingbing மூன்று வருடம் நடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி நடிகர்களுக்கு தடை விதிப்பது முதல் முறையல்ல. சீனாவில் சட்டத்தை எதிர்க்கும் விதமான படத்தில் நடித்ததால் கூட பல நடிகர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய தடைகள் வெளிப்படையாக அரசால் அறிவிக்கப்படாது. Fan Bingbing இதுவரை இந்த சர்ச்சை பற்றி வாய்திறக்கவில்லை, அவரது சமூக வலைதளபக்கங்களிலும் நீண்ட காலமாக எந்த அப்டேட்டும் இல்லை. அதனால் அவருக்கு தடை போட்டிருப்பது உண்மையாக இருக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + five =

*