;
Athirady Tamil News

மணல் விநியோகத்திற்காக போலி அனுமதிப்பத்திரம் தயாரித்தவர் கைது..!!

0

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தினால் மண் மற்றும் மணல் விநியோகத்திற்காக வழங்கப்படுகின்ற அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் போலி நிறுவனம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயாங்கொட, களகெடிஹேன பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட அந்த நிறுவனம், சீதுவை பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அங்கிருந்து போலி அனுமதிப்பத்திரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு கணினிகள், அச்சு இயந்திரம், ஸ்கேன் இயந்திரம் மற்றும் இறப்பர் முத்திரைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

22 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 8 =

*