;
Athirady Tamil News

வவுனியாவில் நுண்நிதி நிறுவனம் கிராமத்திற்குள் தடை மத்தியஸ்த சபையை நாடியுள்ள நிறுவனம்..!!

0

வவுனியாவில் நுண்நிதி நிறுவனங்களின் அதிகரித்த செயற்பாட்டினால் தற்கொலைக்கு முகம் கொடுக்கவுள்ள பெண்தலைமைத்துவக்குடும்பங்களின் நலனினை கருத்திற்கொண்டு சாந்தசோலைக்கிராமத்திற்குள் செயற்படும் கிராம அமைப்புக்கள் சில ஒன்றிணைந்து அப்பகுதியில் வைத்து நுண்நிதி நிறுவனம் கடன் வழங்கவும் பணம் வசூலிக்கவும் கடந்த வாரத்தில் நிறுவனங்களுக்கு தடை விதித்திருந்ததுடன் அந்நிறுவனங்களுக்கு எழுத்து மூலமாக அறிவிப்புக்களும் அனுப்பிவைக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் வசித்து வரும் சிலர் பெற்ற கடனை குறித்த அலுவலகங்களுக்குச் சென்று செலுத்திவருகின்றனர். இதனிடையே நுண்நிதி நிறுவனம் ஒன்று அப்பகுதியில் தனது நிறுவனத்தினால் கடன் பெற்றுக்கொண்டவர்களுக்கு எதிராக மத்தியஸ்த சபையின் கடிதங்களையும் அனுப்பிவைத்துள்ளது. கடன் பணம் பெற்றுக்கொண்ட சிலருக்கு இக்கடிதங்கள் கிடைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், குறித்த நுண்நிதி நிறுவனம் எமது மத்தியஸ்த சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிப்பிணக்கு தொடர்பாக 1988ஆம் ஆண்டின் 72ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்திற்கமைய மத்தியஸ்தம் செய்யும் மாநாடு ஒன்றிற்கு அழைக்கும் அறிவித்தல் சட்டத்திற்கு அமைய செயற்பட்டு கட்சிக்காரர்களை தீர்வொன்றிற்கு கொண்டுவருவதற்கு தாங்கள் விரும்பிய மத்தியஸ்தர் ஒருவரை தெரிவு செய்வதற்கு 26.08.2018 அன்று முற்பகல் 9.30மணியளவில் வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் நடைபெறுகின்ற கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நுண்நிதி நிறுவனங்கள் சிலவற்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாளிகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − three =

*