;
Athirady Tamil News

வவுனியாவில் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டன..!! (படங்கள்)

0

வவுனியாவில் தனியார் பேரூந்துகள் இன்று வழமைபோல் சேவையில் ஈடுபட்டுள்ளது.
அரசினால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள போக்குவரத்து விதி மீறலுக்கான தண்டப்பணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து தனியார் பேரூந்து சாரதிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்பகிஸ்கரிப்பு இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் உயர் தரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் நன்மை கருதியும் ஏனைய பயணிகளின் நன்மை கருதியும் பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவு வழங்கமுடியாது என தெரிவித்திருந்தன.

இந் நிலையில் பரவலாக சாரதிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் வவுனியா மற்றும் வட மாகாணத்தில் அனைத்து பேரூந்து சேவைகளும் வழமைபோல் இடம்பெற்றதுடன் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்காது தமது பயணங்களை தொடர்ந்திருந்தனர்.

????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − nine =

*