;
Athirady Tamil News

தலையில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!!

0

மில்லெனிய, கெசல்கமுவ பிரதேச வீடொன்றின் பின் பக்கத்தில் இருந்த அறையில் தலையில் பாரிய காயங்களுடன் விழுந்து இருந்த 51 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மில்லெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

தலையில் ஏற்பட்டுள்ள காயம் ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது பட்டதால் எற்பட்டதா என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுமையான காயங்களுக்கு உள்ளான பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் தகாத உறவை பேணி வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மில்லெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*