;
Athirady Tamil News

யாழ் மாவட்ட சுதந்திரகட்சி உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கான அழைப்பிதழ் இன்று வழங்கி வைப்பு..!!

0

விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் தலைமையிலான யாழ் மாவட்ட சுதந்திரக்கட்சியின், மாநகர,நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமாக 16/08/2018 அன்று கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள யாழ் சுதந்திரக்கட்சி காரியாலயத்தில் இன்று உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பைஸ்தர் முஸ்தபா அவர்களின் இணைப்பாளர் றிஸ்மி அவர்களினால் அழைப்பிதழ் கடிதங்கள் விவசாய பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன் முன்னிலையில் வைத்து உறுப்பினர்களுக்கு நேரடியாக கையளிக்கப்பட்டிருந்தது.

சபை உறுப்பினர்களின் பிரதேச ரீதியான செயற்பாடுகளை வலுவூட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு திகதி விளையாட்டு துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை பெற உள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் உத்தியோகபூர்வமாக உறுப்பினர்களுக்கான நிதி வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தி நோக்கத்தினை அடைந்து கொள்வதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்து வழங்குவதன் மூலமே பிரதேச மக்களின் வருமான மட்டத்தினை அதிகரிப்பதற்கு முடியும் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் எண்ணக்கருவாக உள்ளூராட்சி தேர்தல் கால நடவடிக்கையின் பொழுது எண்ணக்கருவாக தெரிவிக்கப்பட்டிருந்ததோடு அவை இன்று நிதர்ச்சனமாக்கியமைக்கு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பிரதி அமைச்சருக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உள்ளூராட்சி உறுப்பினர்களின் அபிவிருத்திகளுக்கு கை கொடுப்பதோடு,மக்களின் அபிலாசைகளும் பூர்த்தி செய்யப்படும் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வடமாகானத்திற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 2 =

*