;
Athirady Tamil News

வாஜ்பாய் மறைவு – பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு..!!

0

பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை 5 மணியளவில் காலமானார்.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாஜ்பாய் மறைவையொட்டி மத்திய அரசு நிகழ்சிகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், நாடுமுழுவதும் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 18,19-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற இருந்த பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + eighteen =

*