;
Athirady Tamil News

திருகோணமலையில் தயிர் வடை வாங்கியவருக்கு நடந்த சோதனை..!!

0

திருகோணமலை பிரதான வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் தயிர் வடை வாங்கிச் சென்ற ஒருவர் வடைக்குள் பீடித் துண்டு ஒன்று இருந்ததாக கிண்ணியா சுகாதார அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த உணவகம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த உணவகத்தில் எட்டு தயிர் வடைகளை வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்று மாலை நேரத் தேனீர் ஆகாரங்களுடன் உணவருந்த முற்பட்டபோது தனது மகன் கடித்த தயிர் வடைக்குள் பீடித் துண்டு ஒன்று இருந்ததாக உணவு வாங்கிச் சென்றவர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து தயிர் வடை வாங்கிய குறித்த நபர் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் உரிய வடையுடன் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்கமைய சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், பாவனைக்குதவாத தயிர் வடைகள் ஒரு தொகையும், ஒரு தொகை கோழி இறைச்சி பொறியல், மாசி சம்பல் ஒரு தொகையும் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த உணவகம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதுடன், உணவக உரிமையாளருக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 14 =

*