;
Athirady Tamil News

வவுனியாவில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

வவுனியாவில் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் இன்று (17) வழங்கி வைக்கப்பட்டது.

வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூகசேவைகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரனால் வவுனியா சமூக சேவைக் திணைக்களத்தில், வவுனியா சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ். வாசன் தலைமையில் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மற்றும் வவுனியா தெற்கு பகுதிகளை சேர்ந்த பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட பத்து குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு வடமாகாண புனர்வாழ்வு அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபா நிதியில் குறித்த வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ரூபிணி வரதலிங்கம் கலந்தகொண்டு உதவித்திட்டங்களை வழங்கி வைத்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*