;
Athirady Tamil News

வவுனியாவில் 35 கிலோ மரை இறைச்சியுடன் இருவர் கைது..!! (படங்கள்)

0

வவுனியா, நெளுக்குளம் பகுதியில் 35 கிலோ மரை இறைச்சியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று (17) முற்பகல் பட்டரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா போதை ஒழிப்பு பிரிவினருடன், வவுனியா புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி அவர்களின் வழிநடத்தலில் எஸ். ஜ. உசாந்த தலைமையில் சென்ற குழுவினர் நெளுக்குளம் பகுதியில் வைத்து பட்டா ரக வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொள்ளப்பட்ட போது பழுதடைந்த உணவுகளுக்குள் மறைத்து பக்கட் ஒன்றில் பொதி செய்யப்பட்டு கிடாச்சூரியிலிருந்து வவுனியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட 35 கிலோ கிராம் மரை இறைச்சியைக் கைப்பற்றியுள்ளதுடன், அதனை கொண்டு சென்ற 39 மற்றும் 19 வயதுடைய தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த (78190) மென்டிஸ், (64618) ரூபவன்ச, (49524) தெனியகொட, (61866) சாந்தகலும், (14725) குணவர்த்தன, (45720) ராஜபச்சே, (85257) ஏக்கநாயக்க, (1074) நிரோசன் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரே இதனைக் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட மரை இறைச்சியும் பட்டாரக சாரதியும் உதவியாளரும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 4 =

*