;
Athirady Tamil News

வவுனியா பேராறு குடிநீர் திட்டத்தை பார்வையிட்டார் அமைச்சர் ரப்ஹக்கீம்..!! (படங்கள்)

0

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் மூலம் பேராறு குடிநீர்திட்டத்திற்கும் வேறு திட்டங்களுக்குமாக சுமார் 5800 மில்லியன் ரூபா நிதியில் ஆரம்பிக்கப்பட்ட பேராறு குடிநீர் திட்டம் முடிவுறும் நகர திட்டமிடல் மற்றும் நிலையில் அதனை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைப்பு அமைச்சர் ரப்ஹக்கீம் நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

வடமாகாணத்திலே பாரிய குடிநீர் வழங்கும் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட பேராறு குடிநீர் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இப் பிரதேசத்தின் விவசயிகளின் வேண்டுகோளுக்கமைய இவ் நீர் தேக்கதில் இருந்து செல்லும் மேலதிகமான நீரை 15க்கும் மேற்பட்ட குளங்களில் நீர் செல்லக்கூடிய வகையில் கலிங்கு அமைத்து கொடுப்பதற்க்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதனால் பல விவசாயக் குடும்பங்கள் இரண்டு போகம் நெற்பயிற் செய்க்கை செய்யக்கூடிய வாய்ப்புக்கிட்டியுள்ளது. அத்துடன், இப் பிரதேசமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்க்குரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சருடன் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், முத்தலிப் பாவா பாருக், பிரதேச சபை உறுப்பினர் மாஹிர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வட மாகாண பொது முகாமையாளர் பாரதிதாசன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*