;
Athirady Tamil News

வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தின் நிலை தொடர்பில் அனந்தி சசிதரன் நேரில் சென்று பார்வையிட்டார்..!! (படங்கள்)

0

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் ட்றக் வாகனம் மோதி விபத்துக்குள்கி உயிரிழந்தவரின் குடும்பத்தின் நிலை தொடர்பில் இனறு வடமாகாண மகளிர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன் நேரில் சென்று பார்வையிட்டார்

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் ட்றக் வாகனம் மோதி விபத்துக்குள்கி உயிரிழந்தவரின் குடும்பத்தின் நிலை தொடர்பில் இனறு வடமாகாண மகளிர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன் நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த 15.08.2018 அன்று கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 51 வயதான க.குகனேஸ்வரன் என்ற 5 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார். குறித் வீட்டுக்கு சென்ற அனந்தி சசிதரன், குறித்த குடும்பத்திாருடன் கலந்துரையாடினார். தொடர்ந்து குடும்ப நிலைமைகளை கேட்டறிந்த அவர் அவர்களிற்கு ஆறுதல் வழங்கினார்.

ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன் குறிப்பிடுகையில்,
பயன்படுத்த முடியாத பொருத்தமற்ற வாகனங்களை படையினர் பயன்படுத்தி வருகின்றனர். குறித்த சம்பவம் விபத்தாக இருந்தாலும், பாவணைக்க உதவாத வாகனத்தை செலுத்தியமையாலேயே இடம்பெற்றுள்ளது, குறித்த வாகனம் பிறேக் போதுமானதாக இல்லாமையாலேயே விபத்த இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவ்வாறு படையினர் பாவணைக்கு உதவாத வாகனங்களை செலுத்துகின்றனர்.

இவ்வாறான வாகனங்களை கடற்படையினரும், இராணுவத்தினரும் பயன்படுத்துகின்றனர். இன்று குறித்த விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த குடும்பத்தின் நிலை என்ன. 5 பிள்ளைகளை கொண்ட இந்த குடும்பத்தின் நிலை தொடர்பில் யார் பொறுப்பு கூறப்புாகின்றார்கள. இதற்காகவே வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என நாம் அழுத்தம் கொடுத்த வருகின்றோம்.

இந்த குடும்பம் மீள்குடியேறிய காலம் தொடர்டு எவ்வித அடிப்படை வசதிக்ளும் அற்ற நிலையில் வாழ்கின்றது. தற்காலிக கொட்டகையில் வாழும் இவர்களிற்கு யார் பாதுகாப்பளிப்பது, இவ்வாறான தகர கொட்டகையில்தான் இவர்கள் வாழ்கின்றனர். இவ்விடம் தொடர்பில் அரச அதிகாரிகள் விரைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் இதன்புாது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.

சொந்தமாக காணியோ, வீடோ அற்ற நிலையில் சகோதரி ஒருவரின் தற்காலிக கொட்டகையில் குறித்த குடும்பம் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*