;
Athirady Tamil News

இத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு..!!

0

இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது, “இத்தாலியிலுள்ள ஏரி ஒன்றில் தனது குடும்பத்தினருடன் குளிக்க சென்ற இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மஹரகமவைச் சேர்ந்த 35 வயதான ஆசிரி ஹசிதபிரிய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

லேக்கோ – கோமோ – கோலிகோ ஆகிய பிரதேசங்களை இணைந்து அமைந்துள்ள இந்த ஏரி ஆபத்தானது என குறிப்பிடப்படுகிறது.

ஏரியில் குளிக்க செல்வதற்கு முன்னர் விழிப்புணர்வு இல்லாமையே இந்த மரணத்திற்கு காரணம் என அந்த நாட்டில் உள்ள இலங்கையர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 5 =

*