;
Athirady Tamil News

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்துக்கு பாதிப்பு..!!

0

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்துக்கு பாதிப்பு நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஸ்டிரதன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயநிலை காரணமாக நேற்று காலை அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டு, மண்சரிவு அகற்றப்பட்டபின் வழமைக்கு திரும்பின.

தொடர்ந்தும் நேற்று மாலை அவ்வீதியில் ஏற்பட்ட மண்சரிவுடன் வீதி முற்றாக மூடப்பட்டது. இதனால் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகினர்.

அதனை தொடர்ந்து வீதி அதிகார சபையினரும், ஹட்டன் பொலிஸாரும் இணைந்து அவ்வீதிக்கு அருகில் புதிய வீதியினை அமைத்து 17.08.2018 அன்று இரவு 10 மணி முதல் அவ்வீதியில் ஒரு வழி போக்குவரத்தாக மாற்றினர்.

அதன் பின் அவ்வீதியின் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.

எனினும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வண்ணமே உள்ளது. இதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 2 =

*