;
Athirady Tamil News

பல வருடங்களின் பின் காசல்ரீ நீர்தேக்கம் நிரம்பியது..!!

0

மலையகத்தில் தொடரும் சீரற்ற கால நிலையினால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து நிரம்பி வழிகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பி நீர் பாய்கின்றது.

பல வருடங்களின் பின்னர் காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர் நிரம்பி வழிகிறதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, களனி ஆற்றை பயன்படுத்துபவர்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை, மேல் கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − nine =

*