;
Athirady Tamil News

உரும்பிராய் காந்திஜி சனசமூக நிலையத்துக்கு தையல் இயந்திரங்கள்..!! (படங்கள்)

0

உரும்பிராய் காந்திஜி சனசமூக நிலையத்துக்கு தையல் இயந்திரங்கள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.

உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்படும் தையல் பயிற்சி நிலையத்துக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 18.08.2018 சனிக்கிழமை மாலை 03 மணியளவில் உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூக நிலையத்தில் தலைவர் ரமணன் தலைமையில் இடம்பெற்றது.

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களின் 2018ஆம் ஆண்டுக்கான மாகாணசபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் மேற்படி தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி.கிழக்கு(கோப்பாய்)பிரதேசசபைத்தலைவர் தி.நிரோஷ், வலி.கிழக்கு(கோப்பாய்)பிரதேசசபை உறுப்பினர் சி.அகீபன் மற்றும் பயனாளிகளான பொதுமக்கள் எனப்பலரும்செய்தி கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + one =

*