;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 20 ஆம் வருடாந்த பொதுக்கூட்டம்..!! (படங்கள்)

0

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 20 ஆம் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (18) சங்கத்தின் தலைவர் எஸ்.ரி.ஜே. இராஜேஸ்வரன் தலைமையில் கொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்விற்கு மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்களால் முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் அளிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவரால் நினைவுக் கேடயம் ஒன்றும் முதலமைச்சருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் விசேட தேவைக்கு உட்பட்டோர் மற்றும் தாய் தந்தையரை இழந்த மாணவர், மாணவிகள் என 20 பேருக்கு வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினரால் வழங்கப்பட்ட பணஉதவிகளை விருந்தினர்கள் வழங்கி வைத்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + eleven =

*