;
Athirady Tamil News

வடபுலத்து கலாசாரம் தெரியாத பிரபா கணேஷனுக்கு வன்னிக்குள் வர எந்த அருகதையும் இல்லை..!!

0

வடக்கில் வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை சீர்குலைக்கும் வகையில் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேஷனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையினை அனைத்து சமூகமும் வண்மையாக கண்டிக்க வேண்டும் என வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவரும்,வவுனியா நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இன்று ஊடகமொன்றில் வெளியான வன்னி மாவட்டத்தின் பல பகுதிகளில் பாரியளவில் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு என்ற தலைப்பில் வெளியான செய்தி தொடர்பில் தாம் அதிர்ச்சியுற்றுள்ளேன். ,வன்னி மாவட்ட மக்களைின் விடயங்களில் மூக்கை நுழைத்து மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்த நிலையில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் வேறு எவருமின்றி இருந்து கொண்டு பிழையான எடுகோல்களை மையப்படுத்தி மீண்டும் வடக்கில் தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வரும் உரிமைகளையும்,சலுகைகளையும் பறித்தெடுக்கும் அசிங்கத்தனமானதொரு செயற்பாட்டின் முகவராக இந்த பிரபா கணேஷன் மாறியுள்ளமையினை அவரது அறிக்கையில் காணமுடிகின்றது.

வன்னி மாவட்டத்திற்கு முஸ்லிம்கள் பலவந்தமாக கொண்டுவரப்பட்டு குடியமர்த்தப்பட்டுவருவதாகவும்,அதுவும் தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு முஸ்லிம் அமைச்சர் இதனை செய்வதாக பிரபா கணேஷன் தெரிவித்துள்ளமையானது முற்றிலும் திட்டமிடப்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான இனவாதத்தின் முகத்தினை காட்டுகின்றது.

1990 ஆம் ஆண்டு வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 3 தசாப்தங்கள் அகதி முகாம்களில் வாழ்ந்த போதும்,திரும்பியும் பாரக்காத இந்த பிரபா கணேஷன்,வடக்கு முஸ்லிம்களின் வரலாற்று பின்னணியினையும் அறியாத இவர் அப்பட்டமான பொய் மூட்டைகளை ஊடகங்களுக்கு அவிழ்த்துவிட்டுள்ளார்.

அரசியலில் மக்களுக்கு எதையும் செய்து சாதனை செய்து காட்ட முடியாத பிரபா கணேஷனை கடந்த தேர்தலில் அவரது மக்கள் புற முதுகு காட்டி ஓட வைத்து அரசியலில் அஸ்தமனத்தை காட்டினர்.இப்படிப்பட்ட செல்வாக்கற்ற பிரபா கணேஷன் வடக்கில் அமைதியாக வாழும் மூவினத்தையும் மீண்டும் உசுப்பேத்தி இன ரீதியான பிளவுக்கு வித்திட முனைவதானது இவர் சர்வதேசத்தினதும்,இந்த நாட்டில் வடக்கில் மீண்டும் யுத்தம் ஏற்படப் போகின்றது என்ற மாயையினை தோற்றுவித்துவரும் இனவாத சக்திகளின் கூலியாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் பிரபா கணேஷனுக்கு பேசுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை.அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பவர் இனவாதமற்ற சிறந்த தலைவர் என்பதை வடக்கில் வாழும்,தமிழர்களும்,சிங்களவர்களும்.முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்டுள்ளதுடன்,சர்வதேசமும் இவரது பணியினை பாராற்றியுள்ள நிலையில் வெறும் பிரபலத்துக்காக அரசியல் செய்யுமு் பிரபா கணேஷன் போன்றவர்கள் இந்த நாட்டு அரசியலுக்கு தகுதியற்ற வர் என்பதை நாம் கண்டிப்புடன் தெரிவிக்கவிரும்புகின்றோம்.

கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு சமாதானம் ஏற்படும் வரை வடக்கில் முஸ்லிம் மக்களுக்கு ஒரு வீட்டைக் கூட எவரும் கட்டிக்கொடுக்கவில்லை.அந்த காலத்தில் அவர்கள்அகதிகளாக ஓலைக் கொட்டில்களில் முகாம்களில் வாழ்ந்து வந்தனர்.ஆனால் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும்,அரச இயந்திரமும் வடக்கில் அப்போது வாழ்ந்து வந்த தமிழ்மக்களுக்கு அந்த வீடுகளை பெற்றுக் கொடுத்தன.இதனை புள்ளி விபரத்துடன் விவாதிக்க எம்மால் முடியும்,பொறுப்புள்ள ஒரு பிரதி அமைச்சராக இருப்பத்தாகவும் ,இனவாதத்தை கடந்து செயற்படும் ஒருவராக தான் இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் பிரபா கணேஷன் வடக்கில் தமிழ் மக்களுக்கு சமாதானத்தின் எதனை கிழித்திருக்கின்றார் என கேட்கவிரும்புகின்றேன்.

காலத்துக்கு காலம் புற்றீசல் போன்று முளைத்து வந்து இந்த மக்களின் உணர்வுகளை உசுப்பி அதன் மூலம் சுாவிக்க துடிக்கும் பிரபா கணேஷன் போன்ற இனவாதிகளின் பின்னால் தமிழ் பேசும் மக்கள் ஒரு போதும் செல்ல மாட்டார்கள் என்பதுடன்,பொறுப்பற்ற அறிக்கைவிடுவதை பிரபா கணேஷன் நிறுத்தி கொள்ள வேண்டும் என எமது அமைப்பு பகிரங்கமாக வேண்டிக் கொள்ளவிரும்புகின்றது.

அதே வேளை வவுனியா வர்த்தக நிலையங்களை முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் அதிகாரத்தால் முஸ்லிம் பெற்றுவருவதால் தமிழ் மக்கள் வியாபார ரீதியில் பின்னடைவதாக பொறுப்பற்றதும்,ஆதாரமற்றதுமான உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டுளள பிரபா கணேஷனின் இந்த செயலை வவுனியா நகர சபை உறுப்பினர் என்ற வகையில் வன்மையாக கண்டிப்பதுடன்,இது போன்ற ஆதரமற்ற கருத்துக்களை விதைத்து இனவாத சிந்தணைகளை ஏற்படுத்த வேண்டாம் என அவரிடம் கேட்கவிரும்புவதாக வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 8 =

*