;
Athirady Tamil News

ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்கிய ஆடை விற்பனை நிறுவனம்..!! (படங்கள்)

0

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களிற்கு சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தினால் 50 வீத விலைக் கழிவில் ஹஜ் பெருநாள் ஆடைகள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப ஆரம்ப நிகழ்வு இன்று(18) சனிக்கிழமை பிற்பகல் அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முன்றலில் இடம்பெற்றதுடன் அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் (ஏ.வீ.எம்) முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.அஸ்லம் றியாஜ் ஊடகவியலாளர்களுக்கு குறித்த ஆடை கொள்வனவு பௌச்சர்களை வழங்கி வைத்தார்.

இதன் போது நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தவிசாளர் எம்.றியாத் ஏ. மஜீத் பொருளாளர் ஜூல்பிக்கா ஷரீப் உள்ளிட்ட அமைப்பின் ஊடகவியலாளர்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பெருநாளை முன்னிட்டு ஆடைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் நோக்குடன் அமைப்பின் தேசியத் தவிசாளர் றியாத் ஏ. மஜீத் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக ஊடகவியலாளர்களின் நலனைக் கருதிற் கொண்டு அவர்களின் சேவையினை கௌரவிக்கும் முகமாக அஸ்லம் பிக் மார்ட் நிறுவனம் 50 வீத விலைக் கழிவில் ஆடைகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*